Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

கிறுக்கல்கள்..

2011-12-13

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

**
அரைமணி நேரம் பேருந்து பயணத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்து இரண்டு வார்த்தை பேசியவன் கூட இறங்கும் போது போயிட்டு வாரேன்னு சொல்லிட்டுப் போறான்..
ஆனால் ஆன்லைனில் சாட்டிங்கில் வரும் பாழ்ய நண்பர்கள் bye என்று கூட சொல்லாமல் தொடர்பை துண்டித்துவிடுகின்றனர்.

**

கற்பனைகள் அதிகம் வளர்க்காதீர்கள்
அவை கட்டவிழ்த்து விடப்பட்டால்
அடங்குவதும் அடக்குவதும் மிக கடினம்..

**

சும்மா இருக்கும் ஒவ்வொரு கணமும்
எதாவது செய் என்று சொல்கிறது மனம்..

**
ஆழ்ந்த வேலையில் ஈடுபடும் போது
கொஞ்ச ஒய்வு எடுத்துக் கொள் என்கிறது மூளை..

**

கூடுதலா ஒன்று வேண்டுமென்று கூட்டப்பட்டு,
நெருக்கம் பெருக்கலாக நிகழ்த்தப்பட்டு,
விடை தவறானதால்
கழித்து விடப்படுகிறது...!

பெண் சிசுக் கொலை..

**
என்னைப் பார்த்து..,

அவள் முகம் சுழிக்கும் ஒவ்வொரு முறையும்
என் தற்கொலை முயற்சி நிகழ்கிறது..!

அவள் முகம் மலரும் பொழுதெல்லாம்
என் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது..!

**
தலையில் ஈரத்துண்டுடன் ,
ஆறு புள்ளி கோலம் வரைந்துவிட்டு,
விரலால் அளக்கப்பட்ட சாணியில்,
செம்பருத்திப் பூவை நட்டு விட்டு சென்று விட்டாள் அந்த தேவதை..

ஈயும் மொய்க்கிறது.. தேனீயும் மொய்க்கிறது..

**
வேர்களை விட விழுதுகளை பிடித்துக்கொள்ளுங்கள்..
எனெனில்
வேர்கள் உங்களை உருவாக்கியது..
விழுதுகள் நீங்கள் உருவாக்கியவை...!

**
உனக்கு சூரியன் உதிப்பது பிடிக்குமா..? மறைவது பிடிக்குமா..? என்று கேட்கும் நண்பனுக்கு எப்படி புரிய வைப்பேன்.
ஒளியை மறைக்க வரும் இருளை விட, இருளை விலக்க வரும் ஒளியே சிறந்தது என்று...!

**
கடல் அருகிலும் ஒரு இனம் இருக்கு,
மலை அருகிலும் ஒரு இனம் இருக்கு,
அவர்களை கண்டுகிடத்தான் ஆள் இல்லை..!

**


பனி இரவு

2011-11-01

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


பனி இரவு என்னை வேண்டா வெறுப்புடன்
கண் மூட வைத்தது.
கனவு ஜன்னல் திறக்கப்பட்டது.
பாதம் பூமியில் பட ஈரம் தலைக்கேறியது.
வயிற்றுப் பகுதியில் ஒரு கணம்.
எங்கும் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிறக்
மலையில் மூச்சு பிடித்து ஏறிக்கொண்டிருக்கிறேன்.
நீரோடை அருகில் ஒரு பெண்..!
கால் மூட்டுக்கு பின்னால் மச்சத்தை காண்பிக்கிறாள்.
தொட்டுப்பார்க்கிறேன். மறைகிறது..
சிரிக்கிறாள்..!
முழுவதும்  திறக்கப்பட்ட முதுகுக்கு பின்னால்
மச்சத்தை தொடுகிறேன். மறைகிறது..
நாணுகிறாள்..
என் கையைப்பிடித்து முன் தோளின் இறக்கத்தை காண்பிக்கிறாள்.
வழுவழுப்பான சிகரத்தின் உச்சியில் இருந்து இறங்குகிறேன்.
அவளும் மறைகிறாள்..
நான் சிரித்துக்கொள்கிறேன்..!
கரும்பாறைகளுக்கிடையே தீடிரென்று
வெள்ளிப்போல் அருவிக் கொட்டுகிறது..
தலையில் ஏறிய ஈரம் அருவியாக விழுகிறது.
நனைய மனம் இல்லை.
நாணி உட்காருகிறேன்.
பெரிய பாறைகளுக்கு மேலே மேகத்தினுள் அவள் சென்றுக் கொண்டிருக்கிறாள்..
அங்கும் இங்கும் திரும்பி பார்க்கிறேன்.
போர்வைக்குள் இருள் மட்டும் தனித்துருக்கிறது..!!


அழுக்கான அன்னைகள்..

2011-09-07

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்








ஆண்டு பொதுத்தேர்வு,

வேண்டுதலுக்கு ஆலயத்திற்கு சென்றேன்...!!

உள்ளே  மாசற்ற அன்னை தன் பாலகனை கையில் ஏந்தி நின்றுக்கொண்டிருந்தாள்..

காணிக்கை போட்டு வேண்டினேன்..

வெளியே  மாசுள்ள அன்னைகள் தன் அழுக்குள்ள பாலகன்களை கையில் ஏந்தி வரிசையாக உட்கார்ந்திருந்தனர்..

ஒவ்வொருத்தருக்கும் காணிக்கை போட்டேன்..

மாசற்ற அன்னை கண் கலங்க என்னை ஆசிர்வதிக்கவில்லை...!!

அழுக்கான அன்னைகள் என்னை  கண் கலங்க ஆசிர்வதித்து அனுப்பினர்...!!

என் காதலியிடம் என் பழைய காதலை கூறினேன்..!!

2011-09-04

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


அழகான மாலைப் பொழுதில்..

என் காதலியிடம் என் பழைய காதலை கூறினேன்..!!

அவள்தான் என்னை  எமாற்றிவிட்டாள் என்றேன்..

உச்.. கொட்டினாள்...!!

சிறிது இளைப்பாறலுக்குப் பின்..

அவளது பழைய காதலை சொல்ல ஆரம்பித்தாள்..

சுவாரசியமாக கூறினாள்...!!

அவள்தான் அவனை எமாற்றிவிட்டதாக கூறி வருத்தப்பட்டாள்..

எனக்கு இப்போது பயம் தொற்றிக்கொண்டது..

எங்கே என்னையும் எமாற்றிவிடுவாளோ என்று...!!

காலண்டர் அட்டை

2011-09-03

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
 
 
அன்றோரு நாள் ஸ்கூலில் புக்கும், நோட்டும் கொடுத்தார்கள்..

நண்பர்கள் பலர் ப்ரவுன் கலரால் ஜோடித்து வந்தனர்...

நாங்கள் முழு நிர்வாணமாக கொண்டு சென்றோம்...
...
ஆசிரியரின் திட்டை வீட்டில் நாங்கள் திட்டினோம்...

எங்களுக்கு வீட்டிலும் உதை கிடைத்தது...

எப்படியோ கெஞ்சி கூத்தாடி, தமிழ், ஆங்கில கட்டுரை நோட்டுகளை மட்டும் திருமண ஜோடிகளைப் போல லேமினஸனால் அலங்கரித்தோம்..

லேபிளும், பைண்டிங்குமாக புத்தகங்கள் வகுப்பறையில் அணிவகுத்தன...

நாங்கள் எங்களுடைய புத்தகம் மற்றும் நோட்டின் மீது கடந்த கால லீவுகளையும், விழாக்களையும் கட்டங்களில் பார்த்துக் மகிழ்ந்துக் கொண்டிருந்தோம்...

பெண்ணே ! உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
 
 
 
பெண்ணே ! உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

பேருந்து பயணத்தில் உங்கள் தலையில் சூடிய மல்லிகைப் பூவை சிதற விடாதீர்கள்...!!

பின்னால் தனியாக தொங்கி கொண்டிருக்கும் உங்கள் அழகிய கூந்தலை அடிக்கடி முன்னாடி பின்னாடி அலைக்கலைக்காதீர்கள்...!!
...
உங்கள் வரண்டு போன ரோஜா போன்ற இதழ்களை அடிக்கடி உங்கள் உமிழ் நீரால் குளிப்பாட்டாதீர்கள்...!!

கோபமாய் பார்க்க வேண்டிய நேரத்தில் கரிசனமாய் பார்க்காதீர்கள்...!!

பிங்க் கலரால் வர்ணம் தீட்டப்பட்ட உங்கள் அழகிய நகத்தால் மொபைலை அடிக்கடி நொண்டாதீர்கள்..!!

அண்ணம் போல் இருக்கும் உங்கள் அழகிய பாதங்களை ஹீல்ஸ் செருப்பில் இருந்து எடுத்து வெளிய காட்டாதீர்கள்...!!

எனெனில்

அன்று இரவு நீங்கள் எங்கள் சிற்றின்ப கனவுகளில் வந்து தொல்லை பண்ணலாம்;

அல்லது

நாங்கள் தொலைக்க நினைக்கும் மறக்க நினைக்கும் எங்கள் பழைய காதல், காதலிகளை நினைவுப்படுத்தலாம்;

எங்கள் இயலாமையை தூண்டி விட்டு வெட்கப்பட வைக்கலாம்..!!

தயவுசெய்து எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்..!!
 
 
 
ஒவியம் : இளையராஜா