பனி இரவு

2011-11-01

| | |


பனி இரவு என்னை வேண்டா வெறுப்புடன்
கண் மூட வைத்தது.
கனவு ஜன்னல் திறக்கப்பட்டது.
பாதம் பூமியில் பட ஈரம் தலைக்கேறியது.
வயிற்றுப் பகுதியில் ஒரு கணம்.
எங்கும் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிறக்
மலையில் மூச்சு பிடித்து ஏறிக்கொண்டிருக்கிறேன்.
நீரோடை அருகில் ஒரு பெண்..!
கால் மூட்டுக்கு பின்னால் மச்சத்தை காண்பிக்கிறாள்.
தொட்டுப்பார்க்கிறேன். மறைகிறது..
சிரிக்கிறாள்..!
முழுவதும்  திறக்கப்பட்ட முதுகுக்கு பின்னால்
மச்சத்தை தொடுகிறேன். மறைகிறது..
நாணுகிறாள்..
என் கையைப்பிடித்து முன் தோளின் இறக்கத்தை காண்பிக்கிறாள்.
வழுவழுப்பான சிகரத்தின் உச்சியில் இருந்து இறங்குகிறேன்.
அவளும் மறைகிறாள்..
நான் சிரித்துக்கொள்கிறேன்..!
கரும்பாறைகளுக்கிடையே தீடிரென்று
வெள்ளிப்போல் அருவிக் கொட்டுகிறது..
தலையில் ஏறிய ஈரம் அருவியாக விழுகிறது.
நனைய மனம் இல்லை.
நாணி உட்காருகிறேன்.
பெரிய பாறைகளுக்கு மேலே மேகத்தினுள் அவள் சென்றுக் கொண்டிருக்கிறாள்..
அங்கும் இங்கும் திரும்பி பார்க்கிறேன்.
போர்வைக்குள் இருள் மட்டும் தனித்துருக்கிறது..!!


0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Post a Comment