ஆண்டு பொதுத்தேர்வு,
வேண்டுதலுக்கு ஆலயத்திற்கு சென்றேன்...!!
உள்ளே மாசற்ற அன்னை தன் பாலகனை கையில் ஏந்தி நின்றுக்கொண்டிருந்தாள்..
காணிக்கை போட்டு வேண்டினேன்..
வெளியே மாசுள்ள அன்னைகள் தன் அழுக்குள்ள பாலகன்களை கையில் ஏந்தி வரிசையாக உட்கார்ந்திருந்தனர்..
ஒவ்வொருத்தருக்கும் காணிக்கை போட்டேன்..
மாசற்ற அன்னை கண் கலங்க என்னை ஆசிர்வதிக்கவில்லை...!!
அழுக்கான அன்னைகள் என்னை கண் கலங்க ஆசிர்வதித்து அனுப்பினர்...!!
0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:
Post a Comment