"வருகிற செப்டம்பர் 9 ல மூணு பேர தூக்குல போட போறாங்க தெரியுமா..?"
"தெரியுமே.."
"தெரியுமா..! உனக்கு கோபம் வரல.."
"எதுக்கு வரனும்..?"
"மனித உயிரை சிதைக்க போறாங்க..இரக்கம் வரலயா.."
"தப்பு பண்ணுனா, தண்டனை கிடைக்கத்தான் செய்யும்.."
"தப்பு பண்ணுனாங்கன்னு தெரியுமா..?"
"அதான் ஊருக்கே தெரியுமே.."
"உனக்கு தெரியுமா.."
"எனக்கு தெரியும் போதுமா..! அதுக்கு வருத்தம் பட்டு நான் என்ன பண்ண.. ஆள விடுறியா.."
என கூறி விட்டு பேஸ்புக்கில் வெட்டி கமெண்ட் கொடுக்கவும், நண்பர்களின் வீடியோக்கும், ஃபோட்டோக்கும் லைக் கொடுக்கவும் சென்றுவிட்டான்...
சென்று விட்டான் சொல்வதை விட.. சென்று விட்டேன் என்று சொல்வதுதான் சரியாயிருக்கும்...
அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தா எனக்கு என்ன...?
மூன்று பேருக்காக செங்கொடி உயிர் விட்டா எனக்கு என்ன...?
மூன்று பேரும் தூக்குல தொங்குனா எனக்கு என்ன..?
எனக்கு என் வேலை முக்கியம்.. என் குடும்பம் முக்கியம்...
இருபது வருடம் கழித்து என் மகன் கேட்பான் "ஒரு தப்பு செய்யாத மூன்று பேர கொண்ணாங்களே.. அப்ப நீங்க ஒன்னும் பண்ணலயா..."என்று,
அப்பொது தலை தாழ்த்தி நிற்கப்போவதற்கு பதிலா, இப்பவே கூனி குறுகி நிற்கிறேன்..
என்னால் வேற என்ன செய்ய முடியும் இயலாமையுடன் நிற்பது தவிர..
செப்டம்பர் 10 காலையில் எல்லா நாளிதழ்கள் வரும், அப்போது தெரியும்..
நாம் வீரத்தமிழர்களா...? மண்ணை கவ்வினவர்களா என்று...!!
0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:
Post a Comment