கிறுக்கல்கள்..

2011-12-13

| | |

**
அரைமணி நேரம் பேருந்து பயணத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்து இரண்டு வார்த்தை பேசியவன் கூட இறங்கும் போது போயிட்டு வாரேன்னு சொல்லிட்டுப் போறான்..
ஆனால் ஆன்லைனில் சாட்டிங்கில் வரும் பாழ்ய நண்பர்கள் bye என்று கூட சொல்லாமல் தொடர்பை துண்டித்துவிடுகின்றனர்.

**

கற்பனைகள் அதிகம் வளர்க்காதீர்கள்
அவை கட்டவிழ்த்து விடப்பட்டால்
அடங்குவதும் அடக்குவதும் மிக கடினம்..

**

சும்மா இருக்கும் ஒவ்வொரு கணமும்
எதாவது செய் என்று சொல்கிறது மனம்..

**
ஆழ்ந்த வேலையில் ஈடுபடும் போது
கொஞ்ச ஒய்வு எடுத்துக் கொள் என்கிறது மூளை..

**

கூடுதலா ஒன்று வேண்டுமென்று கூட்டப்பட்டு,
நெருக்கம் பெருக்கலாக நிகழ்த்தப்பட்டு,
விடை தவறானதால்
கழித்து விடப்படுகிறது...!

பெண் சிசுக் கொலை..

**
என்னைப் பார்த்து..,

அவள் முகம் சுழிக்கும் ஒவ்வொரு முறையும்
என் தற்கொலை முயற்சி நிகழ்கிறது..!

அவள் முகம் மலரும் பொழுதெல்லாம்
என் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது..!

**
தலையில் ஈரத்துண்டுடன் ,
ஆறு புள்ளி கோலம் வரைந்துவிட்டு,
விரலால் அளக்கப்பட்ட சாணியில்,
செம்பருத்திப் பூவை நட்டு விட்டு சென்று விட்டாள் அந்த தேவதை..

ஈயும் மொய்க்கிறது.. தேனீயும் மொய்க்கிறது..

**
வேர்களை விட விழுதுகளை பிடித்துக்கொள்ளுங்கள்..
எனெனில்
வேர்கள் உங்களை உருவாக்கியது..
விழுதுகள் நீங்கள் உருவாக்கியவை...!

**
உனக்கு சூரியன் உதிப்பது பிடிக்குமா..? மறைவது பிடிக்குமா..? என்று கேட்கும் நண்பனுக்கு எப்படி புரிய வைப்பேன்.
ஒளியை மறைக்க வரும் இருளை விட, இருளை விலக்க வரும் ஒளியே சிறந்தது என்று...!

**
கடல் அருகிலும் ஒரு இனம் இருக்கு,
மலை அருகிலும் ஒரு இனம் இருக்கு,
அவர்களை கண்டுகிடத்தான் ஆள் இல்லை..!

**


1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

J S Gnanasekar said...

'பெண் சிசுக் கொலை' கிறுக்கல் அருமை.

Post a Comment