போதிசத்வ மைத்ராய என்னும் வங்காள எழுத்தாளர் பணியின் நிமித்தமாக தூத்துக்குடி யில் 1960 ல் வசித்து வந்திருக்கிறார். அங்கு அவர் கண்ட மீனவர்களின் வாழ்க்கைப்பதிவை வங்காளத்திற்கு சென்று நாவலாக பதிவு பண்ணியிருக்கிறார். தூத்துக்குடி மீனவர் வாழ்க்கையை மட்டுமல்ல , தென் தமிழகத்தின் வாழ் இயல்புகளையும் , தமிழகத்தின் பாரம்பரிய கலைகளையும் , அக்காலக்கட்டத்தில் நடைப்பெற்ற அரசியல் தளங்களையும் அழகாக பதிவு பண்ணியிருக்கிறார்.
கிருஷ்ணமூர்த்தியின் மொழியாக்கத்தில் இந்த அறிய படைப்பு தமிழில் வெளிவந்துள்ளது. நேஷனல் புக் டிரசட் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் மிகப்பெரிய மீனவ பணக்காரர், அவர் செல்வாக்கு இலங்கை வரை பரவிள்ளது ,எவ்வாரானால் அங்குள்ள மந்திரிகளை இவர் நியமிக்கும் அளவுக்கு.. அவருடைய மகன் அந்தோணி. அந்தோணி சிறு வயதிலே தூத்துகுடிய விட்டு ஓடி போய்,கல்கத்தாவில் படித்து லண்டனில் இந்திய பாரின் கம்மிசனில் வேலை செய்கிறார். இவனுடைய பால்ய சிநேகிதன் பீட்டர். இவன் கடலில் போய் மீன் பிடிக்கும் கூலி மீனவன்.
அந்தோணி அப்பாவை தொழில் போட்டி காரணமாக யாரோ கொலை செய்ய, அப்பாவின் இறந்த செய்தி கேட்டு அந்தோணி லண்டனிலிருந்து தூத்துக்குடி வருகிறான்.
அவன் சிறு வயதில் பார்த்த தூத்துக்குடி இப்போது இல்ல. மிகவும் மாறி போயிருக்கிறது. தன ஜாதிக்குள்ளே போட்டி, பொறாமை என்று மாறியிருக்கிறது.. தன ஜாதிகுள்ளான சண்டைகளை மாற்ற முயல்கிறான்.
தஞ்சாவூர் காவிரிகரையில் பிறந்த வளர்ந்த ராமன் ,திருச்சியில் படித்து , பரத கலையில் தேர்ச்சிப் பெற்றவன். ராமனுடைய கதையும் பீட்டர் கதையும் இணைவது அருமை
ராமன் கதையும், பீட்டர் கதையும் தனித்தனியாக பயணம் செய்கிறது.
தமிழகத்தின் அனைத்து ஊரும் இந்த நாவலில் இடம் பெறுகிறது. அதன் மாதிரி அந்தந்த காலகட்டத்தில் நடைப்பெற்ற வரலாற்று நிகழ்சிகளையும் இடம் பெறுகிறது. எடுத்துகாட்டாக ஆஷஸ் துரை கொலை, சிதம்பரனார் பிள்ளை கப்பல் விட்டது, ராஜாஜி தமிழத்தை ஆண்டது போன்றவை.
மீனவர்களான பரவர்களின் பழைய பாரம்பரியம், அவர்களுக்கும் இலங்கை, மற்ற நாடுகளுக்குண்டான உறவுகளை சொல்கிறது. அவர்வளுக்குள்ளே மேசைகாரர்கள், கம்மகாரர்கள் என்ற பாகுபாடு, அவர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்திய தோணி வியாபாரம், கப்பல் வியாபாரம் போன்றவற்றையும் விவரிக்கிறது.
கடைசியில் அந்தோணி தன அப்பாவை கொன்றவர்களை பழிவாங்க முடியாமல் லண்டன் செல்ல , பீட்டர் அதை முடித்து வைக்கிறான்.
நாவல் பல வரலாறுடன், வரலாறுகளை பதித்து விட்டு செல்கிறது. முத்துகுளிதுரை மீனவர்கள் எவ்வாறு கிருஸ்தவ மதத்திற்கு மாறினார்கள் , அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும், முத்து குளித்தலில் தாங்கள் எவ்வளவு பேர்பெற்றவர்கள் என்பதையும் சொல்கிறது
இந்த நாவல்.
படித்து முடித்தவுடன் எப்படிடா ஒரு வங்காள எழுத்தாளர் நம்முடைய கலாச்சாரத்தை அனுபவித்து, அதை பதிவு பண்ணினார் என்பதை நினைத்து யோசித்துக்கொண்டிருந்தேன்.
மீனவர்களைப்பற்றி பதிவு செய்த நாவலான வண்ணநிலவனின் கடல் புரத்தில், ஜோ டீ குருஷின் ஆழி சூழ் உலகு, கொற்கை போன்றவற்றிற்கு முன்பாகவே சிப்பியின் வயிற்றில் நாவல் அவர்களின் வாழ்வை பதிவு செய்துள்ளது.
கதைகள் நம் மண்ணில்தான் கொட்டி கிடக்கிறது.. நாம்தாம் அள்ளிக்கொள்ள வேண்டும்.
தமிழில் மிகச்சிறந்த நாவல்
2 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:
Thambi jabavukku vazhtukal.
meenavanaippatri eluthappatta navalum athan ezhuthalarkalayum mattum ungal mulamaga theriyum.
'sippiyin vayitril muthu' naval patriya kathai arimugam seithamaikku nantri.
nee solvathil irunthu MYTHRAYEE
meenvanin vazhkkaiyai eluthal neythirupparo?
navalai miha viraiveel padikka muyarchi seiven.
with simply
Subbiahvelu
இந்த நாவலை வாசிக்கும் போது வங்காள எழுத்தாளர் ஒருவரே நம் மண்ணை இவ்வளவு நுட்பமாக பதிவு செய்யும்போது நாம் எவ்வளவு தீவிரமாக இயங்கி நம் மண்ணைப் பதிவு செய்ய வேண்டுமென்ற ஆவல் எழுகிறது. நல்ல நாவல் குறித்த தங்கள் பதிவு அருமை. நன்றி.
Post a Comment