புத்தக கண்காட்சியில் நான்..

2011-01-15

| | |
சென்னை புத்தக கண்காட்சி எனக்கு புதுசு, திருநெல்வேலியில் இருக்கும் போது சென்னை என்பது வெகு தூரம் மட்டுமல்லாமல் வெறும் புத்தக கண்காட்சிக்கா சென்னை போறன்னு கேள்வி வேற...? எனவே அது முடியாத காரியமாக இருந்தது.. இப்போது விருத்தாசலம் பக்கத்துல இருக்கிறதுனால இந்த தடவ பார்த்ருவோம்னு நண்பர் சுப்பையாவுடன் கெளம்பியாச்சு.. சுப்பையா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பேராவுரனியில் பணிபுரிகிறார்.. இருவரும் சென்னை வந்து இறங்கினோம்..


நிறைய புத்தகங்கள் கோவை மற்றும் நெய்வேலி யில் வாங்கியாச்சு எனவே குறிப்பிட்ட புக்ஸ் வாங்கலாம்னு முடிவு பண்ணி முதல்ல உயிர்மை பதிப்பகம் போனோம்.. செம கூட்டம், எல்லாம் இளைஞர்கள் , நானும் இளைஞன்தான் ( கலைஞரின் இளைஞன் அல்ல பா ).

அங்கு வா.மு.கோமுவின் சாந்தாமனியும் இன்ன பிற காதல் கதையும் வாங்கினேன், மேலும் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் நண்பருக்காக வாங்கினேன். அங்கு மனுஷ்யபுத்திரனை சந்தித்தோம்.

மேலும் தமிழினி வெளியிடான நெடுஞ்சாலை, ஜெயமோகனின் இரவு, வண்ணதாசனின் சின்னு முதல் சின்னு வரை, மேலும் சில சிறுகதை தொகுப்புகள் வாங்கினோம்.

ராமகிருஷ்ணன் காற்றில் யாரோ நடக்கிறார்கள் என்கிற தொகுப்பில் சிப்பியின் வயிற்றில் முத்து என்கிற நாவலை அறிமுகபடித்திருப்பார், அந்த நாவலை நேஷனல் புக் டிரசட்ல் வாங்கினேன்.

இந்த புத்தக கண்காட்சி இனிமையாக அமைந்தது....

3 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

சிவா said...

enaku entha books um vangaliye ppa

சிவா said...

cheat pannitiye ppa director

சித்திரவீதிக்காரன் said...

எஸ்.ராமகிருஷ்ணனின் காற்றில் யாரோ நடக்கிறார்கள் நூல் வாசித்து சிப்பியின் வயிற்றில் முத்து' சமீபத்தில் நடந்த மதுரை புத்தகக்கண்காட்சியில் வாங்கினேன். நல்ல நாவல். சமீபத்தில் ஜோ.டி.குருஸின் கொற்கை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

Post a Comment