இதுவும் ஒரு காதல் கதை..

2011-09-13

| | |



மழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே மழை பெய்வதை பார்த்துக்
கொண்டிருந்தான் சிவா. வெளியே வழுவா அடித்த மழையில் உள்ளே சாரல் அடித்து
முகமெல்லாம் சாரல் விழுந்தது. உடம்பெல்லாம் குளிரும் போது மனசும்
குளிர்ச்சி அடைய ஆரம்பிக்கிறது.. மழை பெய்துக்கொண்டே இருக்க கூடாதா என்று
தோணியது.. சிவாவுக்கு மழை மட்டுமல்ல. வெயில் அடித்தாலும் ரசிக்கத்தான்
செய்வான்... இப்படிப்பட்ட நேரத்தில் எல்லாம் சிவாவுக்கு ஊர் ஞாபகம்
வரும். ஊர் ஞாபகம் வந்தா தான் காதலித்த, காதலிக்க நினைத்த பெண்களெல்லாம்
ஞாபகத்திற்கு வருவார்கள்..மழையிலும் வெயிலும் நனைந்து போய் கிடக்கும்
பாளையங்கோட்டை ராமசாமி கோவில் தெருவும், வீட்டுக்கு எதிர்த்தாப்புல
இருக்கும் தெப்பக்குளமும் , அதற்குமேல எப்பொதும் தன் கூடவே இருந்த நன்பண்
ரெய்னீஸ் ஞாபகமும் வரும்..
ரெய்னீஸ்க்கு பேசலாமே என்று மொபைல் போனை எடுத்தான்.. ஒரு மிஸ்டு கால்
இருந்தது. யாரென்று பார்த்தான். புது நம்பரா இருந்தது.. புது நம்பர்
என்றாலே அது பொண்ணா இருக்க கூடாதா என்றுதான்  எல்லா பசங்களும்
நினைக்கிறார்கள்.. சிவாவும் அப்படித்தான் எதிர்ப்பாப்புடன் திருப்பி ஒரு
மிஸ்டு கால் கொடுத்தான்..கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணி பார்த்தான்..
மறுபடியும் ஃபுல் ரிங்க் கொடுத்தான்.. யாரும் எடுக்கவில்லை..மழை விட்டு
விட்டது.. இந்த புது நம்பர் யாரென்று மண்டையை போட்டு
குழப்பியது..மறுபடியும் போன் பண்ணினான்..ரிங்க் போயிக்கொண்டிருந்தது..

"ஹலோ.." என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
"உங்க செல்லுல இருந்து கால் வந்தது.. உங்க நேம் என்னங்க..?" என்றான்..
"காலா...!! இந்த நம்பர்ல இருந்தா..உங்க நேம்...?
"என் நேம் இருக்கட்டும்.. நீங்க உங்க பேர சொல்லுங்க..?" என்றான்.
"ஒன் மினுட்ஸ்...இது என் ஃப்ரண்ட் போன்.. உங்க பேரு சொல்லுங்க.. நான்
வந்ததும் போன் பண்ண்ச் சொல்றேன்.." என்றாள்.
"அது உங்க ஃப்ரண்டு கால் பண்ணும் போது நான் என் பெயரை சொல்லிக்கிடுறேன்..."என்றான்.
அவளும் " ஒகே " என்று போனை வைத்து விட்டாள்..

யாராயிருக்கும் என சிவா யோசிக்க ஆரம்பித்தான்..வாய்சை வைத்து ஒன்னும்
கண்டுபிடிக்க முடியவில்லை.. மறுபடியும் கால் பண்ணலாம்னா அதற்கு
பயமாயிருந்தது.. ஃப்ரண்ட்ஸ் இதற்கு முன்னாடி இப்படிதான் பொண்ணுங்க குரல்ல
ஒட்டிட்டாங்க..


ரெயினீஸ்க்கு போன் பண்ணினான்..போனை எடுத்ததும்
" என்ன டா.. சாப்ட்வேர் இஞ்சினியர்..எப்படிடா இருக்க...என்ன ஒரு போன் கூட
காணொம்.." என்றான் ரெயினீஸ்..
"நல்லா இருக்கேன் டா.. ட்ரெயினிங்க்ல இருக்கேன் அதான்.. பேச முடியல..
அப்புறம் எனக்கு ஒரு மிஸ்டு கால் வந்திச்சு.. போன் பண்ணினா பொண்ணு
பேசுது..நீ ஒன்னும் விளையாடுலயே...?"
"டேய்.. டேய்.. அதுலாம் அப்ப விளையாடுனோம்.. அதுக்குன்னு இப்பவுமாடா..
நான்லாம் இல்லப்பா...மறுபடியும் கால் பண்ணி பார்க்க  வேண்டியதுதானே.."
"அதுவே பண்ணுவேன்னு சொன்னது.. அதான் வெயிட்டிங்க்..."
அதுக்குள்ளே அந்த பழய நம்பர்ல இருந்து கால் வர,
"டேய்.. கட்.. பண்ணு.. அந்த நம்பர்ல இருந்து கால் வருது...பேசிட்டு
பேசுறன்.." என்று ரெயினீஸ் காலை கட் பண்ணிட்டு அந்த கால அட்டெண்ட்
பண்ணினான்.

"ஹலோ..!!" என்றான் மெதுவாக.

" ஹலோ சிவா வா...?" என்றாள் அந்தப் பெண்.. குரல் கேட்க அழகாயிருந்தது.

"ஆமாம்.. நீங்க...?"

"நான்ன்ன்ன்.....!! கண்டுபிடிங்க பார்ப்போம்..." என்றாள் அழகிய
சிரிப்புடன்.. சிரிப்பிலயே சொக்கிப் போனான்.

"என்னால கண்டுபிடிக்கலாம் முடியாதுங்க.. அந்த அள்வுக்கு நமக்கு கேர்ள்
ஃப்ரண்ட்ஸ் இல்லைங்க.." என்றான்.

"ஒகே.. ஒரு க்ளு.. நீதான் என்ன சிரிக்க வச்ச..! நீதான் என்னை அழவும்
வச்ச.. இப்ப..!!"  என்றாள் மறுபடியும் அந்த அழகிய சிரிப்புடன்.

சிவாவுக்கு அது சோபியாவா இருக்குமோ என்று சந்தேகமாயிருந்தது. இத்தனை நாள்
கழித்து எப்படி....!

"சோபி..?" என்றான்.

" சோபிக்கு அப்புறம் கொஸ்டின் மார்க்கா..? என்றாள்.

"இல்ல..  சோபிதான்..." என்றான்... குரல் கொஞ்சம் இறங்கியிருந்தது.

சிறிது நேரம் மௌனம்..

" ஆமாம் சிவா.. நான் சோபிதான் பேசுறேன்... எப்படிடா இருக்க..."

"ம்ம்.. எப்படியோ இருக்கேன்... நீ..?"

"நானும் எதோ  இருக்கேன்... எப்படிடா.. இவ இவ்வளவு நாள் இல்லாமல் இப்ப
பேசுறான்னு பார்க்றியா.. நாம பிரிந்து ஒரு நாலு வருசம் இருக்குமா சிவா...
இப்ப எங்க இருக்க.. என்ன பண்றடா..."

சிவாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.. அவதானா இல்ல யாரும் அவ பேரை
சொல்லி கலாய்க்கிறாங்களா என்று சந்தேகமாயிருந்தது. இருந்தாலும் பேச
ஆசைப்பட்டான்.

" நான் அப்படிலாம் நினைக்கல....நான் இப்ப சென்னைல இருக்கேன்.. இங்க
எனக்கு வேலை கிடைச்சிடுச்சு.. நீ என்ன பண்ற.."

"சென்னையா..? எங்க இருக்க...!"

"வேளச்சேரி... "

"சிவா  நம்ம மீட் பண்ணலாமா.. உன்ன பார்க்கனும் போல இருக்கு... எப்ப மீட்
பண்ணலாம்.."

"மீட் பண்ணலாம்..எங்க் வச்சு.."

"பெசன்ட் நகர் பீச்சுக்கு வரியா..நாளைக்கு மீட் பண்ணலாம்.."

"கண்டிப்பா வாரேன்...அப்புறம்.. என்ன பண்ற.."

"அதுலாம் நாளைக்கு விலாவரியா பேசலாம்..நாளைக்கு ஈவ்னிங்க் வந்துரு.."

"ஒகே வந்துருதேன்..."

"ஒகே பை.."

"பை.."  என்று அவள் போன் வைக்கற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு போனை வைத்தான்..


சிவாவுக்கு தலை சுத்துற மாதிரி இருந்தது. சோபிய எப்படி நம்ம மறந்தோம்
என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டான்.

வெளிய மறுபடியும் மழை பெய்ய ஆரம்பிச்சது.. ஜில்லுனு ஒரு காதல் பூமிகா
மாதிரி சோபி ரீ எண்ட்ரி கொடுக்கிறாளோன்னு தோணியது. ஜோதிகா மாதிரி நமக்கு
ஆள் இல்லன்னு தெரிஞ்சதும்  சந்தோசமாயிருந்தது.

இதே மாதிரி மழை பெய்ந்த நாளன்றுதான் சோபியை முதன்முதலா பார்த்தான். சிவா
வீட்டு மாடியில சுமதி அக்கா வாடகைக்கு இருந்தாங்க. அவங்க வீட்டுக்கு
அடிக்கடி அவங்க ஃப்ரண்டு ஜான்ஸி அடிக்கடி வருவாங்க..

சுமதி அக்கா நல்ல ஜாலி டைப். எதுக்கும் கவலப் படமாட்டாங்க.. அவங்க
வீட்டுக்காரர் வெளி நாட்டுல வேலை பார்த்தார்.
சுமதி அக்காட்ட பேசும் போது கிண்டலும் கேலியுமாத்தான் பேசுவார்கள்
சிவாவும் ரெய்னீஸும்.. அவங்க ஃப்ரண்ட் ஜான்ஸி அக்கா கிட்டயும் இதே
ஜாலியாத்தான் சிவா பேசுவான்.

ஒரு நாள் மழை பெய்துக்கொண்டிருக்கும் போது சிவாவும் ரெய்னீஸும் வீட்டு
வாசலில் உட்கார்ந்திருந்தனர்.. அப்பொழுதுதான் ஜான்ஸி அக்கா கூட சோபி
வந்தாள்.. ஜான்ஸி அக்கா எப்பொழுதும் ஸ்கூட்டிலத்தான் வருவாங்க.
மழையில் வந்ததனால ரெண்டு பேரும் நல்லா நனைந்திருந்தார்கள்..
" என்னக்கா.. நல்லா நனைஞ்சிட்டிங்க போலிருக்கு..." என்றான் சிவா நக்கலாக..

" என்னடா.. நக்கலா.. வந்தன்னா.." என்று சிரிச்சிக்கிட்டே மாடிக்கு
சென்றனர். சோபி வெள்ளை கல்ர் சுடிதாரில் இருந்தாள்.
சிவாவும் ரெய்னீஸும் சோபியை வினோதமாக பார்த்தனர். சோபி சிவாவை லைட்டா
பார்த்துட்டுப் போனாள்.

அடுத்த நாளே சுமதி அக்காட்ட மேட்டர் எல்லாம் கறந்துட்டான். ஜான்ஸி
அக்காவுடைய அக்கா பொண்ணூ சோபி. ஊர் சென்னையாம். ப்ளஸ் டூல ஃபெயில்
ஆகிட்டாள். அதனால சோபி அம்மா ஜான்ஸி வீட்ல கொண்டு விட்டுட்டு
போயிட்டாங்க.. ஜான்ஸி வேலைக்கு போனதும் சோபிக்கு வீட்ல போர்
அடிக்குதுன்னு சுமதி வீட்ல கொண்டு விட்டுட்டு போயிட்டாங்க..

இருவரும் அப்பப்ப பார்த்துக்கொள்வார்கள்.. அடிக்கடி சிவா, ரெய்னீஸ்
மற்றும் அவர்கள் ஃப்ரண்ட்ஸ் எல்லம் அந்த தெருவில் சைக்கிள ஸ்டம்பா வைத்து
ஒன் பிட்ச் கிரிக்கெட் விளையாடுவார்கள். இவங்க விளையாடுற கிறுக்கத்தனமான
ஆட்டத்தை மொட்டை மாடியில் இருந்து சோபி பார்த்து ரசிப்பாள். சிவாவ
பார்த்து மெதுவா சிரிப்பாள். ஆனா இரண்டு பேரும்  பேச மாட்டாங்க. .
சுமதி அக்கா கூட பேசும் போது சோபி பக்கத்தில் நின்று சிவாவை ஒரக்கண்ணால்
பார்த்துக் கொண்டிருப்பாள்..சிவா, சுமதி அக்காவ சீண்டுற மாதிரி சோபியை
சீண்டுவான். அவள் திருப்பி எதும் பேச மாட்டாள். சிரிச்சிகிட்டேத்தான்
இருப்பாள்..

ஒரு நாள் கேஸ் வந்து கீழ இற்க்கி வச்சிட்டு போயிட்டான். அத சொல்ல
மாடிக்கு சுமதி அக்காட்ட சொல்ல சிவா போனான். சோபி மட்டும் தான் வீட்டில்
இருந்தாள். சோபியை மட்டும் பார்த்தும் சிவாவுக்கு ஒரு மாதிரியா இருந்தது.

" அக்கா இல்ல.." என்றான் சிவா.

" இப்பத்தான் கடைக்கு போனாங்க.. உள்ளே வாங்க.." என்றாள்.

"இல்ல.. பரவாயில்ல.. நான் அப்புறமா வாரேன்.. " என்றான் சிரித்தப்படியே.

"அவங்க இருந்தா மட்டும்தான் வருவிங்களா.. நாங்க இருந்தா வரமாட்டிங்களா..?" என்றாள்.

"ச்ச.. ச்ச. அப்படிலாம் இல்ல...இந்தா வந்துட்டேன்,, போதுமா..." என்று
வீட்டுக்குள் வந்தான்.

தனியாக அவளை அவ்வளவு நெருக்கமா பார்த்தது சிவாவுக்கு என்னமோ
பண்ணியது..சோபி ரொம்ப கலராயிருந்தாள். அவள் கலருக்கு அந்த லிப்ஸ்டிக்
அடிக்காத உதடு எடுப்பாயிருந்தது. சிவாவுக்கு பார்வை எங்கெங்கோ போனது..
எவ்வளவு தடுத்தும் பார்வை அவளை விட்டு செல்ல மறுத்தது.. அவள் அதை
அவனையறியாமல் ரசித்தாள்.

சேர் எடுத்து போட்டு உட்காரச் சொன்னாள். தானும் பக்கத்தில் சேர் போட்டு
உட்கார்ந்தாள்.

"அப்புறம் நீங்க என்ன பண்றீங்க.. அக்காட்ட கேட்டா சொல்ல மாட்டுக்குகாங்க.."

"நான் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறேன்... நீ எப்ப உங்க சித்தி வீட்டுக்கு போவ.."

"ஏன்... நான் போனுமா..?"

"இல்ல.. இல்ல.. போயிருயியோன்னு கேட்டேன்.."

"சப்ளிமண்ட்ரி எக்ஸாம் எழுதுற வரைக்கும் இங்க இருப்பேன்.. அப்புறம் அங்க
போயிருவேன்..எனக்கு கவலையாயிருக்கு.."

"எப்ப எக்ஸாம்..?"

" இன்னும் டூ வீக்ஸ் இருக்கு..."

"எந்த பேப்பர்லாம் அவுட்டு..."

"மேக்ஸ், பிசிக்ஸ்...!"

"படிக்கிறியா...?"

"எங்க படிக்க.."

"நான் வேணா சொல்லி தரட்டா..." என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை
பார்த்தான். அவள் வெட்கப்பட்டு

" இப்ப இருந்து, சொல்லித்தரியா.."

"என்ன மரியாதை தேயுது... அக்காட்ட கேட்டுட்டு சொல்லித் தாரேன்.. நீ ஏன்
ஃபெயில் ஆன.. நல்லா படிக்க மாட்டியா..."

" எனக்கு இது மேல விருப்பமே இல்ல.. எனக்கு மாடலிங்க் ஆர் மேக்கப் கேர்ளா
ஆகனும்.. அதான் என் அம்பிஷன்.."

"மேக்கப்லாம் போடுவியா.. எனக்கு எதாவது சொல்லிக்கொடு...உன் புண்ணியத்தில
நானும் அழகாகுறேன்..."

"ஏன் இருக்கிற அழகு போதாதா..? சிவா நீ யாரையாவது லவ் பண்றியா...?

" நெவர்..நம்மள் யார் லவ் பண்ணப்போறாங்க.... நீ..."

"இது வரைக்கும் இல்ல... இனிமேல் பண்ணலாம்னு இருக்கேன்.."

"யாரை.."

"யாரையோ...?" என்று சொல்லி முடிப்பதற்குள் சுமதி அக்கா வந்துவிட்டார்கள்.
இருவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

" என்னடா.. இங்க என்ன பண்ற...சென்னை பொண்ணை கரெக்ட் பண்ண
பார்க்கிறியா..." என்று சொல்லிக்கொண்டே சுமதி அக்கா வீட்டுக்குள்
வந்தார்கள்..

"உங்க சென்னை பொண்ண கரெக்ட் பண்ணிட்டாளும்.. நான் கேஸ் வந்திருக்குன்னு
சொல்ல வந்தேன்.. நான் வாரேன் " என்று சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

அடுத்த நாள் முதல் டெய்லி அவளுக்கு மேக்ஸ் சொல்லிக் கொடுக்க
ஆரம்பித்தான்.. சொல்லிக்கொடுக்கும் போதே பேனாவால அவள் கண்ணத்தை
வருடுவான். அவள் பதிலுக்கு இவன் தொடையில கிள்ளுவாள்..சுமதி அக்கா
தெரிந்தாலும் கண்டுகிட மாட்டாங்க..

ஒரு நாள் அக்கா தற்செயலாக கீழ போயிட்டாங்க..இதுதான் சாக்குன்னு ரெண்டு
பேரும் அடித்து விளையாண்டனர்.

தீடிரென்று சிவா அவள் உதட்டை கையால் பிடித்தான்..அவள் " விடு, விடு"
என்று கை கால உதற அப்படின்னா

"இங்க முத்தம் கொடு" என்று தன் கண்ணத்தை காட்டினான்..அவள் கண்ணத்தில்
கொடுத்தாள். அப்புறம் கையை தட்டி விட்டு ஒட பார்த்தாள். இவன் அவளை
வலுக்கட்டாயமா பிடித்து அவள் உதடு பக்கம் தன் உதடை கொண்டு சென்றான்.
பக்கத்தில் சென்று விட்டு விலகிவிட்டான்..இவன் விலகுவதை பார்த்து அவள்
இவனை பிடித்து இவன் உதட்டில் அவள் உதட்டை பதித்தாள்.

சுமதி அக்கா வரவும் இருவரும் சகஜமாயினர்.

எக்ஸாம் முடிந்து அவள் ஜான்ஸி வீட்டுக்கு சென்று விட்டாள். அவள் இல்லாமல்
சிவா ரொம்ப கஷ்டப்பட்டான். அவள் அங்கிருந்து
இவன் நம்பருக்கு அடிக்கடி கால் பண்ணுவாள். சில நேரம் ஜான்ஸி நம்பர்ல
இருந்தும் கால் பண்ணுவாள்.

ஒரு நாள் ஜான்ஸி வீட்டில் இருந்து கால் வந்திருந்தது. ஜான்ஸிதான்
பேசிருந்தாள். ஜான்ஸி வீட்டில் கம்ப்யூட்டர் ஒன்னு ரிப்பர் பார்க்க
கூப்பிட்டிருந்தாள்.

சிவா ஜன்ஸி வீட்டுக்கு போனான். வீட்டுக்குள் சோபியைத் தேடினான்.. ஜான்ஸி
அவனை தனியாக் உட்கார வைத்தாள். இவனுக்கு எதோ வித்தியாசம் தெரிந்தது.

ஜான்ஸிதான் ஆரம்பித்தாள்.

"சிவா நீ நல்ல பையன்னு எனக்கு தெரியும்... சோபியை நீ லவ் பண்றியா..?"

"ஆமாக்கா.." என்றான் பயத்துடன்.

"அவா.. அங்க  எத்தன மாசம் இருந்திருப்பா.."

"இரண்டு மாசம் இருக்கும்.."

"இரண்டு மாசத்தில லவ்வா...?"

"....!!"

"சொல்லுப்பா.. ரெண்டு மாசத்தில அவள உன்னால புரிஞ்சிக்கிட முடியுமா.."

"புரிஞ்சிக்கிட்டேன்.."

"புரிஞ்சிக்கிட்டியா..? அடப் பாவமே.. அவா சென்னைல எப்படி இருந்தான்னு
உனக்கு தெரியுமா இல்ல அவள் முழு கேரக்டர்தான் உனக்கு தெரியுமா...?

"...."

"நீ காலேஜ் படிச்சிக்கிட்டு இருக்க.. படிச்சி முடித்து நல்ல வேலைக்கு
போக வேண்டாமா...அத விட்டுட்டு அவ பின்னாடி அலைஞ்சிட்டு இருக்க.. உனக்கு
வெக்கமாயில்லை..."  குரல் கொஞ்சம் உயர்ந்திருந்தது.

"அப்ப்டிலாம் இல்லக்கா.."

"என்ன நொன்னக்கா.... அவளையும் அடித்து திட்டி வச்சிருக்கேன்... நீயும்
இனிமேல் அவள் பின்னாடி வராத.. போன் கீன் பண்ணின. அப்புறம்
பார்த்துக்க...உன் குடும்பம் சின்னா பின்னாமாயிரும்... எதோ தெரிந்தவன்னால
உடுறேன.. சுமதிக்காக உன்னை எதுவும் பண்ணல.. பார்த்துப் போ.." என்று
கழுத்தை பிடித்து வெளிய தள்ளாத குறையா அனுப்பி வைத்தாள்.

வெளியே கேட்டை  திற்ந்துட்டு வெளிய வந்தான்.. கண்ணெல்லாம்
கலங்கியிருந்தது. திரும்பி பார்த்தான். மாடியில் ஜன்னலில் இரண்டு கண்
மட்டும் தெரிந்தது. க்ண்னில் கண்ணீர் படிந்திருந்தது...

சுமதி அக்கா தான் சொன்னார்கள். "அவா பாஸ் ஆயிட்டா... சென்னைக்கு போயிட்டா
டா. கடைசியா எனக்கு போன் பண்ணினாடா..
அவ உன்னை எமாற்றிட்டாளாம்... ரொம்ப அழுதாடா...கேட்க கஸ்டமாயிருந்தது.." என்றாள்..

பழசையெல்லாம்  நினைத்துப் பார்க்கும் போது சந்தோசமாத்தான் இருக்கும்.
நாளைக்கு அவளை பார்க்கப் போகிற சந்தோசத்தில் துங்கிப் போனான்.


அடுத்த நாள் பெசண்ட் நகர் பீச்க்க்கு போய் நின்றான்.. அவள் வந்தாள்.. ஆளே
மாறியிருந்தாள். கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாள்.
இருவரும் சிரிச்சப் படியே தங்களுக்குள் வரவேற்றுக் கொண்டனர்.

மணலில் உட்கார்ந்தனர். இருவரும் கொஞ்சம் நேரம் ஒன்னும் பேசவில்லை..

" நம்ம அந்த வயசுல பண்ணுனத பார்த்தா.. காமெடியா தோணுதுலா.." என்றாள்.
அவனைப் பார்த்தப்படியே

"தெரியல... ஒரு அஃப்பக்ஸன்  அவ்வளவுதான்..."

" அது லவ் இல்லயா.."

" அஃப்பக்ஸன் கம் லவ்ன்னு வச்சிக்கலாம்..."

"நாந்தான் உன்னை எமாற்றிட்டேன்...சாரி.." என்றாள்.

" நானும் உன்னை எமாற்றல.. நீயும் என்னை எமாற்றல... இரண்டு பேருமே.. நம்மள
எமாத்திக்கிட்டோம்.."

"யா..யா.. க்ரெக்ட்..அப்புறம் உன் லைப் எப்படி இருக்குது சிவா.. எனக்கு
அப்புறம் நீ எத்தனயோ பொண்ணை பார்த்திருப்ப.. ஒரு நாளாவது என்னை
நினைச்சுப் பார்த்திருப்பியா...?

"முதல்ல கொஞ்ச நாள் நினைச்சேன்... அப்புறம் சகஜமாயிட்டேன்.. அதுக்குன்னு
உன்னை குற்றம் சொல்லல..." என்றான்.

"நீ எனக்கு ஒரு முத்தம் கொடுத்தியே.. அது ஞாபகம் இருக்கா சிவா...?"
என்றாள் கண்ணில் ஆர்வம் பொங்க..

"நான் கொடுக்கல... நீதான் எனக்கு கொடுத்த...அத எப்படி நான் மறக்க முடியும்..."

அவள் சிரிச்சிக்கிட்டே..

"ஆமா.. ஆமா.. நானும் நினைத்துப் பார்ப்பேன்... எல்லாம் காயத்துக்கு
மருந்து போடுற மாதிரி...."

"என் நம்பர் உனக்கு இவ்வளவு நாள் ஞாபகம் வச்சிருந்தியா..."

"என் செல்ல தான் இருக்கும்.. அப்பப்ப பார்ப்பேன்.. போன் பண்ண தைரியம்
வராது...இப்ப தீடிரென்று பண்ணுவொம்னு தோனுச்சு...நான் என்ன
பண்ணுறேன்னு நீ கேட்கவே இல்ல...."

" என்ன பண்ணுற,,,"

"மேக்கப் ஆர்ட்டிஸ்ட்.. சொந்தமா ஃப்யிட்டீ பார்லர் வச்சிருக்கேன்... நான்
என் அம்பிஸன் அடைந்துட்டேன்... ஆனா உன்ன தவிர..
நீ யாரையும் லவ் பண்றியா சிவா.."

"இல்ல... ஏன்..?"

"மறுபடிய்ம் நம்ம லவ் பண்ணுனா நல்லா இருக்குமா..சிவா...?"

"தெரியல..."

"என்ன சிவா தெரியலன்னு சொல்ற... "

'என்ன சொல்றதுன்னு  தெரியல..."

"எனக்கு மறுபடியும் அதே மாதிரி ஒரு முத்தம் தர முடியுமா..."

"மாட்டேன்..!"

"ஏன்.."   கெஞ்சலோடு கேட்டாள்.

"நம்மதான் இன்னும் லவ்வே சொல்லலயே..."

"சொல்லிட்டாப்போச்சு.... ஐ லவ் யூ.. போதுமா...?

"இன்னும் சத்தமா சொல்லு..."

"ஐ லவ் யூ சிவா.." என்று உரக்க கத்தினாள்.

இருவரும் முத்த மழையில் நனைந்தனர்.

0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Post a Comment